அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை: அமைச்சர் சரத்குமார் தகவல்

 

சென்னை: அரசு காலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சரத்குமார் கேட்டுக் கொண்டார். மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மை துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் சமயமூர்த்தி துறையை பற்றியும், துறையின் தலைமையகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் சரத்குமார், அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பயிற்சி மையங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டுமென்றும், அரசு அலுவலகங்களில் ஊழலற்ற மற்றும் வெளிப்படை தன்மையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, இயக்குநர் கோபால சுந்தரராஜ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் துரைக்குமார், பிற துறை தலைவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: