மேகதாதுவில் அணை கட்ட முயற்சி: ஜி.கே.வாசன் கண்டனம்

 

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற, நடுவர் மன்ற தீர்ப்பை மீறிய செயல் இது. இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும்.

எனவே, இப்போதைய தமிழக தவெக, காங்கிரஸ் கூட்டணி அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. எனவே தமிழக அரசு உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசோடு கண்டிப்போடு பேசி மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கக்கூடாது என்பதை உறுதிப்படத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: