திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63வது மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.இந்த மலர் கண்காட்சியில் கோடிக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சியில் 10,000க்கும் மேற்பட்ட அலங்கார மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான மலர்களை கொண்டு பாம்பன் பாலம், ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்றும், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கோபுரம், திண்டுக்கல் பூட்டு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சி இன்று முதல் மே 31 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 12 நாட்களுக்கு பூங்கா நுழைவு கட்டணம் உயர்த்த பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்களுக்கு கட்டணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
