சென்னையில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை.. நான்கு பேர் கைது

சென்னை: சென்னை மாதவரத்தில் கஞ்சா கடத்தி வருவதாக மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்துள்ளது. அதன் பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் மாதவரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 2 சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தில் கையில் பையுடன் சந்தேகத்திற்கு ஏற்ப சென்று கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கஞ்சாவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனை செய்த வியாபாரி மாதவரம் அடுத்த பால்பண்ணை மாத்தூர் பால சுப்பிரமணியன் நகரை சேர்ந்த பழைய இரும்புக் கடை வைத்திருக்ககும் ராமமூர்த்தி மற்றும் கதிர்வேல் என தெரியவந்தது.

இதனையடுத்து ராமமூர்த்தி நடத்தி வந்த இரும்பு கடையை சோதனை செய்த போது 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதாக விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவர்கள் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: