கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை 7 மணிக்கு அலுவலக இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அரசு அலுவலக ஊழியர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே தலைப்பு அலுவலகத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனர்.
இன்று 39-வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலும் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். அடிக்கடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பும் வாலிபர் யார் என்பதை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
