இன்ஸ்டாகிராம் மூலம் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு: போலீசில் மனைவி பரபரப்பு புகார்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (40). இவர் ஏற்கனவே திருமணமான சத்யா (45) என்பவருடன் 2வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சத்யா சென்று விட்டதால் லட்சுமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிய சத்யா ஒரு பெண்ணை அழைத்து வந்ததால் அவருக்கு லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட லட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் தான் பாதிக்கப்பட்டது குறித்து லட்சுமி கூறுகையில், ‘‘சத்யா என்பவருடன் திருமணமாகி 10 வருடங்களாகும் நிலையில் தற்போது 3 வயதில் மகன் உள்ளான்.

ஆனால் எனது க ணவர் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார். அதுமட்டுமின்றி எனது முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு தற்போது 16 வயது ஆகிறது. அந்த சிறுமியிடம் சத்யா தவறாக நடந்து கொண்டதால் சத்யா போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார்.

இருப்பினும் திருந்தாமல் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாக தொடர்ந்து பல பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களுடன் பழகி வருகிறார். அவரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவரை காவல்துறையினர் விடக்கூடாது. சிறையில் அடைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: