திரைத்துறையில் செலவினங்களை தவிர்க்க வேண்டும்: கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை: திரைப்பட துறையில் வீண் செலவினங்களை குறைக்க வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேற்கு ஆசிய போர் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திரைத்துறையிலும் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும்.

செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் வெறும் பிரமாண்டத்துக்காக அல்லாமல், திரைப்படத்துக்கு தேவையான செலவு என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். வெறும் பொழுதுபோக்கை தாண்டிய பொறுப்புகளை சினிமா கொண்டுள்ளது. இன்று நாம் சினிமாவின் பொருளாதாரத்தை பாதுகாத்தால், நாளைய சினிமாவின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: