மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் விஜய்க்கு நிறைய சவால்கள் இருக்கு: சவுந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி

 

நாகர்கோவில் : நாகர்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இங்கு நடந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் 27 பேருக்கு செயற்கை கை, கால் மற்றும் 5 பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வழங்கி உள்ளோம். கன்னியாகுமரியில் இருந்து மக்களுக்கு நல்லது செய்ய இருக்கிறேன். அதற்கான தொடக்கம் தான் இது.

கன்னியாகுமரி பகவதியம்மனை எனக்கு பிடிக்கும். இங்கு இருந்து தொடங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம். மக்கள் என்ன கேட்கிறீர்களோ? அதை பொறுத்து செய்வோம். தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் குடும்பம் சார்பாக விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அவர் நிறைய சவால்களை சந்தித்து வந்திருக்கிறார். இன்னும் நிறைய சவால் வர இருக்கிறது’’ என்றார்.

 

Related Stories: