மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

சென்னை: மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1.31 கோடி மகளிருக்கு வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த மே 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தின் புதிய அரசாக பொறுப்பேற்று கொண்டது. இதன் காரணமாக இந்த தொகை வரும் மாதங்களில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 1.31 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில் அரசின் முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மறுசீரமைப்பு என்ற பெயரில் பயனாளிகள் நீக்கப்படுவார்களா என பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: