சென்னை: தென்னக ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக நரைன் இன்று (2026, மே 13) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்தப்பொறுப்பை ஏற்கும் முன்னதாக, S.N. நரைன் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சரின் தனிச் செயலாளராகப் அயல் பணியில் (deputation) பணியாற்றி வந்தார்.
2010-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய இரயில்வே போக்குவரத்து சேவை (IRTS) அதிகாரியான நாராயண், இந்திய இரயில்வேயில் பயணிகள் வசதிகள், செயல்பாட்டுத் திறன், டிஜிட்டல் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பு தொடர்பான பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
நரைன் தென்னக இரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இயக்கம் மற்றும் வணிகப் பிரிவுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர், புது டெல்லிக்கு இடமாற்றம் பெற்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறையில் துணைச் செயலாளராகவும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றினார்.
தென்னக இரயில்வேயில் பணியாற்றிய காலத்தில், அவர் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் முதுநிலை கோட்ட வணிக மேலாளர், தென்னக இரயில்வேயின் துணை முதன்மை இயக்க மேலாளர் (போக்குவரத்து பாதுகாப்பு), சென்னை மற்றும் பாலக்காடு கோட்டங்களின் கோட்ட வணிக மேலாளர் மற்றும் சேலம் கோட்டத்தின் கோட்ட இயக்க மேலாளர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மேலும், இந்திய இரயில்வேயின் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் கொள்கை முயற்சிகளைச் செயல்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
நரைன் கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் (PSG College of Technology) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். ராயபுரம் லோகோ ஷெட்டின் முதுநிலை கோட்ட மின்சாரப் பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள செந்தமிழ் செல்வனுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
