11 நாள் இழுபறி முடிவுக்கு வந்தது: கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சராக வி.டி.சதீசனை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. 11 நாட்களாக முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இழுபறி நீடித்து வந்தது. கேரள முதலமைச்சராக கே.சி.வேணுகோபாலை தேர்வு செய்ய ராகுல் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ராகுல் காந்தியின் முடிவு கேரள காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பின் வாங்கினார்.

இந்நிலையில் கேரள முதலமைச்சர் தேர்வு செய்வதில் 11 நாளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. கேரள முதலமைச்சராக வி.டி.சதீசனை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. கேரள முதலமைச்சராக சதீசன் அறிவிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராக வி.டி.சதீசன் செயல்பட்டார்.

மறைந்த உம்மன் சாண்டிக்கு அடுத்து மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருபவர் சதீசன். கேரளாவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக வி.டி.சதீசன் இருந்து வருகிறார்

Related Stories: