மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சிங்கம்புணரி, மே 14: சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டியை சேர்ந்த வீரன் மகன் சேவுகப் பெருமாள் (35). கொட்டகை அமைக்கும் தொழிலாளி. இவர், தனது தம்பியுடன் காளாப்பூர் பகுதியில் உள்ள புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக வீட்டின் முன்பு கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற மின்சார வயர் மீது சேவுக பெருமாள் கை பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: