வங்கியின் முன்பு தேங்கிய குப்பை

தொண்டி, மே 14: கிழக்கு கடற்கரை சாலை தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் தமிழ்நாடு அரசு கிராம வங்கி எதிர்புரம் நீண்ட நாள்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது. மேலும் சாக்கடைஓடுவதாகவும், அதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஜியாத் கான் கூறியது, வங்கியின் முன்பு நீண்ட நாட்களாக குப்பையும், சாக்கடையும் அள்ளப்படாமல் உள்ளது. குடியிருப்பு மற்றும் வணிக பகுதி என்பதால் உடனடியாக ஊராட்சி மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Related Stories: