கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்

கோவில்பட்டி, மே 14: கோவில்பட்டி அருகே கோ யில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.  கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீவீர காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. சின்ன மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

இதில் சின்ன மாட்டுவண்டி பிரிவில் 12 வண்டிகள், பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 25 வண்டிகள் என 37 மாட்டுவண்டிகள் பங்கேற்று காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. சாலையில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் இருந்து ஆர்வமுடன் கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டியின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

Related Stories: