ஹாக்கி போட்டி தொடக்கம்

மூணாறு, மே 14: மூணாறில் உள்ள தேயிலை கம்பெனி தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அதாவது 1941ம் ஆண்டு முதல் டாடா ஃபின்லே ஷீல்டு கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபகாலமாக ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் மூணாறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஓய்வு நேரங்களில் அங்குள்ள மைதானங்களில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இவர்களின் விளையாட்டு ஆர்வத்தை அங்கீகரிக்கும் வகையில், கம்பெனி நிர்வாகம் இந்த ஆண்டு முதல் ‘ரீப்பிள் டீ இன்டர் எஸ்டேட் ஹாக்கி’ தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய மூணாறில் உள்ள கண்ணன் தேவன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் இப்போட்டிகள் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. தினசரி மதியம் 2:00 மணி மற்றும் மாலை 3:45 மணி என இரண்டு கட்டங்களாகப் போட்டிகள் நடைபெறுகின்றன.இறுதிப்போட்டி வரும் மே 16ம் தேதி நடைபெறவுள்ளது.

 

Related Stories: