மதுரை, மே 14: மதுரை மாநகர் காவல் துறையில் புதிதாக சிங்கப்பெண் சிறப்பு படை பிரிவு துவக்கப்பட்டுள்ளது இந்த பிரிவில் ஒரு பெண் எஸ்ஐ மற்றும் நான்கு பெண் தலைமை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் போதை பொருள் தடுப்பு படை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பிரிவுகளாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தலா ஒரு எஸ்ஐ மற்றும் ஐந்து தலைமை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
