மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை, மே 14: மதுரையில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் ஆக்கிரமிப்புகள் பட்டியலிடப்பட்டு, போலீசார், வருவாய் துறையினருடன் இணைந்து இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மதுரை அண்ணா பஸ் நிலைய பகுதியில் 6 கடைகளின் முன்பு இருந்த இரும்பு தடுப்புகள், போர்டுகள் மற்றும் இப்பகுதியின் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி உதவி இன்ஜினியர் இளங்கோவன் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

 

Related Stories: