ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்

ஈரோடு, மே 13: செவிலியர்களின் சேவையை போற்றும் விதமாகவும், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த நாளை நினைவுகூறும் வகையிலும் ஆண்டுதோறும் மே 12ம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் செவிலியர்கள்,பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், கையில் மெழுகுவரத்தி ஏந்தியும் மரியாதை செலுத்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா, செவிலிய கண்காணிப்பாளர் தனலட்சுமி, உமா மற்றும் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில், செவிலியர்களுக்கு புத்தகங்கள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

 

Related Stories: