சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது

 

 

ஈரோடு,மே12: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம் (65). அரசு போக்குவரத்து கழக சத்தி கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன், 7 வயது சிறுமியிடம் மாங்காய் வாங்கித் தருவதாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறுமி, தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் தாய்,சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில், போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.

Related Stories: