பேபி வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்

 

ஈரோடு, மே 9: ஈரோட்டில் பேபி வாய்க்கால் பொக்லைன் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காலிங்கராயன் வாய்க்காலில் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கழிவுகள் மற்றும் ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்க பேபி வாய்க்கால் கட்டப்பட்டது.
இந்த வாய்க்காலில் கழிவுகளை கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் சில பகுதிகளில் தூர்வாரப்பட்டது. இருப்பினும் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனை முழுமையாக அகற்றி, கழிவு நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்ககோரி தொடர்ந்து பொதுமக்களும், மாமன்றத்தில் கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஈரோடு வைராபாளையம் பகுதியில் ஓடும் பேபி வாய்க்கால் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் கோடை மழை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பராமரிப்பு பணிக்கு ஏதுவாக இந்த தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: