பெருந்துறை, மே 9: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 63 ஆயிரத்து 569 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இதில், கருப்பு தேங்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.39.59க்கும், அதிகபட்சமாக ரூ.46.10க்கும், சராசரி விலையாக ரூ.43.10க்கும் விற்பனை ஆனது. பச்சை தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ.30க்கும், அதிகபட்சமாக ரூ.44.20க்கும், சராசரியாக ரூ.40.50க்கும் விற்பனை ஆனது.
மொத்தம் 22 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய்கள் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
