மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை

 

பள்ளிபாளையம், மே 8: ராமநாதபுரம் புத்தேந்தல் கூரியூரை சேர்ந்தவர் வரதராஜ்(30). இவர் பள்ளிபாளையம் அருகேயுள்ள வெள்ளிக்குட்டையில் தங்கி அங்குள்ள நூற்பு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு 5ஆண்டுக்கு முன் பவித்ரா என்பவருடன் திருமணமானது. வரதராஜூக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வரதராஜ் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் தகராறு செய்த கோபத்தில், வீட்டிற்குள் சென்ற வரதராஜ், சேலையை விட்டத்தில் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி பவித்ரா கொடுத்த புகாரின் பேரில், வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: