திருச்செங்கோடு, மே 8: திருச்செங்கோடு தாலுகா கொன்னையாறு கிராமத்தில் உள்ள மதுரை வீரன் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் சாமிக்கு, கடந்த 27ம் தேதி சீர் செய்து கொண்ட கிழங்கு நாடு நடுஅண்ணன்மார்கள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் சாமிக்கு காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சக்தி அழைத்தல் அதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு ஊஞ்சல் பாட்டு, மதியம் 2 மணிக்கு பெரும்பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து 4 மணிக்கு அனைவருக்கும் கும்பிடு கொடுத்தல் நடந்தது. விழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
