பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்த புதிய வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை பிரிவில் 126 வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சென்னை பிரிவு, 2025-26ம் நிதியாண்டில் பயணிகளின் வசதிக்காக 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், சென்னை பிரிவில் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை 106லிருந்து 126ஆக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 820.32 சதுர மீட்டர் பரப்பளவில் பலதள வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இது அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சந்திப்பாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும். வண்டலூர், பொத்தேரி, ஆவடி தெற்கு, ஆவடி வடக்கு, தாம்பரம் கிழக்கு, செங்கல்பட்டு, பெரம்பூர், சிங்கபெருமாள்கோவில், கடம்பத்தூர், தாம்பரம் சானடோரியம், நெமிலிச்சேரி, எண்ணூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், கிண்டி, பரங்கிமலை, பெரம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் பகுதிகளில் அம்ரித் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, வாகன நிறுத்துமிடங்களில் டிஜிட்டல் டிக்கெட் வசதி, யூபிஐ கட்டண வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு போன்ற நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: