திருச்செங்கோடு, ஏப்.30: திருச்செங்கோடு அடுத்த சூரியம்பாளையம் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கலசாபிஷேக பூஜையில் உற்சவருக்கு பால், தயிர், நெய், சந்தனம், திருநீறு, குங்குமம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தன. 108 கலசாபிஷேகம் பூஜை, விநாயகர் பூஜை, புண்யாகம், மூலமந்திர யாகம், மங்கள திரவிய யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்து வழிபட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
