மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூட உத்தரவு

 

நாமக்கல், ஏப். 20: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், நாளை (21ம் தேதி) முதல் 23ம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்களை முழுமையாக மூடி வைக்க வேண்டும். மேலும், வருகிற மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அன்று ஒரு நாள் அனைத்து மதுபானக்கடைகள், மதுக்கடை பார்கள் மற்றும் அனைத்து லைசென்ஸ் பெற்ற பார்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி ஏப். 21, 22, 23 மற்றும் மே 4 ஆகிய நாட்களில் மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ அல்லது மறைமுகமாக மது விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Related Stories: