லாரி மோதி ஆம்னி வேன் நொறுங்கியது

பள்ளிபாளையம், ஏப்.29: குமாரபாளையம் அருகே கன்டெய்னர் லாரியை முந்திச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த இருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப்(32). இவர், நேற்று அதே ஊரைச்சேர்ந்த நண்பர் சுரேந்தர்(37) என்பவருடன் ஆம்னி வேனில் சேலத்திற்கு புறப்பட்டார். மதியம் 12 மணியளவில் குமாரபாளையம் அடுத்த பச்சாம்பாளையம் அருகே சென்றபோது, கன்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. ஆம்னியில் சென்ற பிரதாப் கன்டெய்னர் லாரியை முந்த முயன்றார். அப்போது, முன்னால் சென்ற டூவீலர் மீது மோதாமல் இருக்க லாரியின் முன்புற ரோட்டிற்கு ஆம்னிவேன் வந்தது. இதில் எதிர்பாராவிதமாக ஆம்னி மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி வேன் அப்பளம் போல நொறுங்கியது. விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: