நாமகிரிப்பேட்டை, ஏப்.22: நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்து குவித்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகளும வந்திருந்தனர்.விரலி மஞ்சள் 988 மூட்டை, உருண்டை மஞ்சள் 319 மூட்டை, பனங்காளி 33 முட்டை என மொத்தம் 1,340 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்திருந்தது. விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில், விரலி ரகம் குவிண்டால் அதிகபட்சம் ரூ.15,933க்கும், குறைந்தபட்சம் ரூ.12,659க்கும், உருண்டை ரகம் அதிகபட்சம் ரூ.13,212க்கும், குறைந்தபட்சம் ரூ.11,042க்கும், பனங்காளி அதிகபட்சம் ரூ.35,469க்கும், குறைந்தபட்சம் ரூ.3,789க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 1,340 மூட்டை மஞ்சள் ரூ.1.10 கோடிக்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமகிரிப்பேட்டையில் ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்
- நாமகிரிப்பேட்டை
- நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- நாமக்கல் மாவட்டம்
- முள்ளுக்குறிச்சி
- மெட்டாலா
