திருச்செங்கோட்டில் மது பதுக்கி விற்றவர் கைது634 பாட்டில்கள் பறிமுதல்

திருச்செங்கோடு, ஏப்.22: திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன் தலைமையில் போலீசார் நே்றறு ஈரோடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பெரிய தெப்பக்குளம் அருகே அட்டை பெட்டிகளுடன் நின்றிருந்தவை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் திருச்செங்கோட்டை சேர்ந்த முத்துராக்கு(54) என்பதும், அவர் அரசு மதுபான பாட்டில்களை பண்டல் பண்டிலாக வாங்கி பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் விற்பனைக்கு பதுக்கிய ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 634 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், முத்த ராக்குவை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: