தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம், ஏப்.29: சேலத்தில் வழிப்பறி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சேலம் கோரிமேடு ஆத்துக்காடு ஆன்மீக நிலையம் எதிரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (44). இவர் மீது கடந்த 2014 ம் ஆண்டு அழகாபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரை பிடிக்க சேலம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்பேரில் அழகாபுரம் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஆத்துக்காடு பகுதியில் பதுங்கியிருந்த செந்தில்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: