சேலம், ஏப்.21: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த புத்திரகவுண்டம்பாளையம் தேவேந்திரநாடு பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (39). இவர் தோட்டத்தில் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏத்தாப்பூர் போலீசார் அவரது தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தனர். அதில், 170 மதுபாட்டில்களை அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
