கெங்கவல்லி, ஏப்.25: ஆத்தூர் அருகே கந்தசாமி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(40). இவரது மனைவி சாரதா(35). நேற்று உறவினர் உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்க்க டூவீலரில் பழனி, சாரதா புறப்பட்டனர். தேவியாகுறிச்சி மேம்பாலத்தில் வந்த போது, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாரதா உயிரிழந்தார். பழனிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தலைவாசல் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
