சேலம், ஏப்.20: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அதிகாரி எச்சரித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டிட மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், அவர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, 23ம் தேதி தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
