விஜய், அதிமுக, பாமக மோடியின் முகமூடி: திமுகவை வீழ்த்த முடியாது: திருமாவளவன் பளார்

 

கடலூரில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று கை சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும். விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் சிதறாமல் திமுக கூட்டணி கட்சிக்கு செல்ல வேண்டும். விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

அதற்கு கூட்டணி கட்சிகள் உறுதுணையாக இருப்பது போன்று நாமும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் களத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். சினிமாவில் ஹீரோ என்று விசில் அடிப்பார்கள். விசில் அடிப்பவர்கள் தியேட்டர்களில் தான் அடிக்க வேண்டும். கொள்கை பிடிப்பு இல்லாதவர்கள். சினிமா தரப்பு மோகத்துக்கு ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இடம் கொடுக்காது. கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி 9 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

விஜய், அதிமுக, பாமக, அமமுக எல்லாம் மோடியின் முகமூடி. இந்த முகமூடியால் திமுகவை வீழ்த்த முடியாது. திமுக கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் உடன் இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடலூர் தொகுதியில் கை சின்னம் வெற்றியின் அடையாளமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: