தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (23ம்தேதி) நடக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையை கடந்த மாதம் 29ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், விவசாயிகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 உயர்த்தி வழங்கப்படும்.
பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் வழங்கப்படும் என்பது உள்பட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இவை உன்னதமான, தேவையான அறிவிப்புகள் என விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை தந்த வாக்குறுதிப்படி தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் 2.19 லட்சத்திற்கும் அதிகமான புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
டெல்டாவில் உள்ள 41 தொகுதிகளிலும் எங்கள் ஆதரவு முதல்வருக்கு தான் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததோடு, வெள்ள நிவாரண நிதியும் தருவதில்லை. இதனால் பாஜ- அதிமுக கூட்டணியை முறியடிக்க டெல்டா விவசாயிகள் தயாராக உள்ளனர் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
என் ரத்தமே விஷமாகிவிட்டது துரோகி அன்புமணி போட்டியிடும் 18 தொகுதியிலும் மண்ணை கவ்வ வையுங்க…சவுமியா
வென்றால் தர்மபுரி அதர்மபுரியாக மாறும்: தேர்தல் சீட்டையும் பல கோடிகளுக்கு விற்று, நம் சமுதாயத்தை அடகு வச்சுட்டாரு: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அன்புமணி கும்பல் மக்களுக்கு சேவை செய்ய மாட்டாங்க. பணத்தை மட்டுமே சம்பாதிப்பாங்க. எனவே, 18 தொகுதிகளில் போட்டியிடும் அன்புமணியின் துரோக கும்பலுக்கு வாக்களிக்க கூடாது என கூறி அன்புமணி செய்த துரோகங்களை பட்டியலிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், தொண்டர்களுக்கு ஒரு கடிதத்தை ராமதாஸ் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நேற்று (நேற்று முன்தினம்) நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்துப் பலரும் கண்ணீர் வடித்தீர்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும். எப்போது அன்புமணி என் பேச்சைக் கேட்காமல், என் கொள்கைகளைக் குழிதோண்டி புதைத்துவிட்டு பணத்துக்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே ஒரு தந்தையாக நான் செத்துவிட்டேன், உங்களுக்காக நான் சிறை சென்றேன். ரத்தம் சிந்தினேன், ஆனால் அன்புமணி இன்று அந்த ரத்தத்தைச் ‘சமூக நீதி வியாபாரமாக’ மாற்றிவிட்டார்.
ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் பல கோடிகளுக்கு விற்று, நம் சமுதாயத்தின் உரிமைகளை அன்புமணி அடகு வைத்துவிட்டார். பெற்ற அப்பனையே கவனிக்காத ஒருவன் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தருவானா? தன் மனைவியையும் மகளையும் அதிகாரத்துக்காக பயன்படுத்தும் இவர், சாதாரணப் பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையைத் தருவான்? தர்மபுரியில் சவுமியா வெற்றிப்பெற்றால், அந்த தர்மபுரி விரைவில் ‘அதர்மபுரி’ என்று பெயர் எடுக்கும்.
அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்டாலின், தன் தந்தை கலைஞர் சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னை செத்துப்போனதாக நினைத்து அரசியல் பண்ணுகிறார். இதைவிட ஒரு தகப்பனுக்குப் பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்? மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்துக்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு ஓட்டுப் போடுவது. உங்கள் பெற்ற தகப்பன் தலையிலேயே நீங்கள் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம். இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அன்புமணி போட்டியிடும் இந்த 18 தொகுதிகளிலும் அவரது துரோகக் கும்பலை மண்ணை கவ்வச் செய்யுங்கள். தர்மம் ஜெயிக்கட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
* அன்புமணி துரோகம் குறித்து பாடல் வெளியீடு
அன்புமணி மீது ராமதாஸ் வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘‘அன்புமணி செய்த துரோகத்தை பாட்டாகவே எழுதிட்டாங்க…’’ இணையத்தில் படு வைரலாகும் பாடல் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.
அந்த பாடலில், ‘‘அன்புமணி ஆட்டம் எல்லாம் வெறும் அவர் குடும்பத்துக்கே…அய்யா பட்ட கஷ்டமெல்லாம், ஊருக்கே தெரியுமே, அன்புமணியின் சுயநலத்தை நாடு இப்ப பார்க்குமே…அதிகார பசிக்காக, அவுரங்க சீப்பா மாறுனாரு…பெத்த அப்பாவையே கண்ணீர் விட வைச்சாரு… ஏடிஎம்கே பேரை சொல்லும் அதிமுக உண்மை தொண்டன் அன்புமணிக்கு ஓட்டுப்போடமாட்டன் என்றைக்குமே.. 18 தொகுதியிலும் மக்கள் பாடம் புகட்டுவாங்க.. அய்யா சிந்தின கண்ணீருக்கு பதில் சொல்லுவாங்க’’ என கூறப்பட்டுள்ளது.
