அக்காவும், தம்பியும் டூவீலரில் ஓட்டு வேட்டை

 

கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். கோவை சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு துவங்கியது. பேரணியை, அண்ணாமலை துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தை இயக்கினார். வானதி சீனிவாசன் அவருடன் பின்னால் அமர்ந்து சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஏற்கனவே அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், வானதி ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று வெளிக்காட்டும் வகையில் இருவரும் ஹாயாக டூவீலரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான பாஜ, அதிமுக மற்றும் தே.ஜ. கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அண்ணாமலை கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆட்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தேவையில்லாதவர்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்’’
என்றார்.

Related Stories: