திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘முன்னாள் முதல்வர் கலைஞர் வீடுகள் தோறும் வண்ணத் தொலைக்காட்சி தந்தது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான டோக்கன் வழங்குவார். அதில் நீங்கள் விரும்பிய பொருளை வாங்கி கொள்ளலாம். மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதால்தான் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதாக கூறி கருப்பு நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்துக்கு துரோகம் செய்வதற்கு சாதகமாக பேசிக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரம் என்பதால் அடுத்த ஜென்மத்தில் எடப்பாடி தொகுதியில் யாராவது ஒருவரது குடும்பத்தில் பிறக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் எடப்பாடி அடுத்த ஜென்மத்தில் தமிழகத்தில் பிறக்க வேண்டாம். முதுகெலும்போடு பிறக்கட்டும். அல்லது குஜராத்தில் பிறக்கட்டும்’’ என்று சாடினார்.
