துவரங்குறிச்சி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து

 

துவரங்குறிச்சி, ஏப்.21: கைகாட்டி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் தைலமரக்காட்டில் நேற்று திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. காட்டில் காய்ந்த சருகுகள் அதிக அளவில் இருந்ததால் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: