சுகேஷின் ரூ.200கோடி மோசடி வழக்கு அப்ரூவராக மாற ஜாக்குலின் கோரிக்கை பதிலளிக்க அவகாசம் கேட்கிறது ஈடி

 

புதுடெல்லி: ரூ.200கோடி மதிப்பிலான பணமோசடி வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியே கொண்டுவருவதாக கூறி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் நெருக்கமாக இருந்த நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் பணமோசடி வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி கோரி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோரிக்கை மனுவிற்கு பதிலளிப்பதற்கு அமலகாக்கத்துறை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதையடுத்து மே 8க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

Related Stories: