பெங்களூரு: ஐதராபாத்தில் இருந்து ஹூப்பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஃப்ளை-91 விமானம், மோசமான வானிலை காரணமாகத் தரையிறங்க முடியாமல் சுமார் 4 மணி நேரம் வானில் வட்டமிட்டு, இறுதியாக நேற்று இரவு பெங்களூருவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஹூப்பள்ளிக்கு செல்லவிருந்த ஃப்ளை-91 ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐசி-3401 விமானம், நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
மோசமான வானிலை காரணமாக, அந்த விமானத்தால் தரையிறங்க முடியாமல், முண்டகோடா, தாவணகெரே மற்றும் ஷிவமொக்கா ஆகிய இடங்களுக்கு அருகே வானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. இதனால் விமானத்தில் இருந்த 18 பயணிகள் பீதியில் அலறினர். விமானம் இறுதியாக இரவு பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அச்சத்தில் பயணிகள் அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
