மது பழக்கத்தால் வாழ்க்கை சீரழிந்தது: பஞ்சாபி பாடகி உருக்கமான வாக்குமூலம்

 

சண்டிகர்: மது பழக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து பாடகி ஜாஸ்மின் சண்ட்லாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல பஞ்சாபி பாடகியான ஜாஸ்மின் சண்ட்லாஸ், தனது கடந்த கால மது பழக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். புகழின் உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வி காரணமாக மதுவுக்கு அடிமையானதாக தெரிவித்துள்ள அவர், ‘தேவைக்கு அதிகமாக மது அருந்தியதால் எனது கலைத்திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் மங்கியது.

அந்த காலகட்டத்தில் நான் மேற்கொண்ட தொழில்முறை ஒப்பந்தங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்து தற்போது வருத்தப்படுகிறேன். அப்போது எனக்கு சுயநினைவே இல்லை. எனது இசை மற்றும் ரசிகர்களுடனான தொடர்பு துண்டிக்கப்படுவதை உணர்ந்த பின்னரே எனது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. தற்போது உடற்பயிற்சி மற்றும் மனத்தெளிவுடன் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன்’ என்றார்.

மது போன்ற போதை பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவருக்கு ரசிகர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில், ‘கடந்த காலத்தை நினைத்து தற்போது வெட்கப்படவில்லை. அந்த கசப்பான அனுபவங்களே என்னை இன்று வலிமையான பெண்ணாக மாற்றியுள்ளது’ என்றுஅவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

Related Stories: