குன்றத்தூர், ஏப்.21: புழல் சிறை ஆயுள் தண்டனை கைதி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
சிறையில் இருந்த ஞானசேகரனுக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக சிறை காவலர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறை கைதிகளுக்கான பிரத்யேக வார்டில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
