கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை எடுத்து கூறி அமுலு பொன்மலரை ஆதரித்து சுந்தர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம், ஏப்.17: திமுக வேட்பாளர் அமுலு பொன்மலரை ஆதரித்து சுந்தர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறினார். மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் புதுப்பேட்டை கிராமத்தில் திறந்த ஜீப்பில் நேற்று காலை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். இதில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையிலும், மாவட்ட கவுன்சிலர் மாலதி செல்வராஜ் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு அமலு பொன்மலரை ஆதரித்து பேசுகையில்,
திராவிட மாடல் அரசின் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், கோவிட் நிவாரண உதவித் தொகை, தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, கோடை நிவாரண தொகையுடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்தி இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றி உள்ளார்.

எனவே ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்று கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். இதில், ஒன்றிய செயலாளர் கோகுலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, அவைத்தலைவர் ரத்தினவேலு, கவுன்சிலர் பொற்செல்வி வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் உசேன், பேரூராட்சித் தலைவர் நந்தினி கரிகாலன், லட்சுமி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜசேகர், ஜோதி முத்துக்குமார், பேக்கரி ரமேஷ், சாரதி, பிரகாஷ்கண்ணன், சங்கர் சிவாச்சாரியார், பாலாஜி லட்சுமணன், ஆனந்தக் கண்ணன், கணேஷ், தேமுதிக கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், திமுக செயற்குழு உறுப்பினர் நாராயணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: