கடந்த 5 ஆண்டில் செயல்படுத்திய நலத்திட்டங்களை கூறி க.சுந்தர் வாக்கு சேகரிப்பு

வாலாஜாபாத், ஏப்.16: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் நேற்று வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய கிராமங்கள் முழுவதும் திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்காக செய்த திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது, வாலாஜாபாத் பகுதியில் உயர்தர அரசு மருத்துவமனை, பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத் – அவளூர் உயர்மட்ட பாலம், வாலாஜாபாத் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை, கிராமப்புற பட்டதாரிகள் தங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வாலாஜாபாத் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் முன்னுரிமை, பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இன்றி இருந்த மக்களுக்கு உடனடி தீர்வாக அரசு பட்டா வழங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான திட்ட பணிகளை திமுக அரசு செய்துள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் குடிநீர் வசதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிமென்ட் சாலை மற்றும் தார் சாலை, உயர் கோபுர மின்விளக்குகள், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், அங்கன்வாடி மைய கட்டிடம் என பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வியாபாரிகள், பொதுமக்களிடம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் செல்வம் எம்பி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி, ஒன்றிய துணை செயலாளர் குப்புசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் குமரன், கார்த்திக், சத்யா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: