கடலூர், ஏப். 19: கடலூர் எஸ்பி ஜெயக்குமார் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடலூர் டிஎஸ்பி தமிழ் இனியன் மேற்பார்வையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் எஸ்ஐ பிரேம்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுனாமி நகர் பனங்காட்டு காலனி அருகே போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ்(36) என்பதும், சுனாமி நகர் பனங்காட்டு காலனி பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இவரிடம் நடத்திய சோதனையில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். இவர் மீது சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கும், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் போதை மாத்திரை வழக்கும் உள்ளன. கஞ்சா வைத்திருந்த குற்றவாளியை பிடித்த முதுநகர் போலீசாரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
சென்னை கஞ்சா வியாபாரி கடலூரில் கைது
- சென்னை
- கடலூர்
- எஸ்.பி ஜெயகுமார்
- முத்துநகர்
- இன்ஸ்பெக்டர்
- ஏழுமலை
- எஸ்ஐ பிரேம்குமார்
- டிஎஸ்பி
- தமிழ்
- இனியன்
