சென்னை, ஏப். 18: சென்னை பெருங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பி.சுந்தரவடிவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஷோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதியை சட்டவிரோதமாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 27 தொகுதிகளில் கார்ப்பரேட் நிதி புழங்குகிறது. இது தேர்தலின் நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, ஷோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி பாஜ வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோரின் வங்கி கணக்குகளையும், நிதி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
