படந்தாலுமூட்டில் பொது இடத்தில் மது குடித்தவர் கைது

மார்த்தாண்டம், ஏப்.14: களியக்காவிளை போலீசார் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் மது குடித்து இடையூறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் தம்பி (63) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் தம்பியை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: