பட்டுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் பெண்கள் கோலாட்டம்

பட்டுக்கோட்டை, ஏப்.12: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ நாடியம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வாக பெண்களின் கோலாட்டம் நடைபெற்றது.

அப்போது, கோயில் வளாகத்தில் அதே நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் சீருடை போல் சேலை அணிந்து சுமார் 2 மணி நேரம் இடைவிடாது கோலாட்டம் ஆடி அசத்தினர். குறிப்பாக திரையிசை பாடலுக்கு ஏற்றார்போல் கோலாட்டம் ஆடியது பார்ப்பவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

 

 

Related Stories: