கொரடாச்சேரி அருகே முசிரியத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

நீடாமங்கலம், ஏப்.10: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே முசிரியத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவினை உறுதி செய்கின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி ஒன்றியம் முசிரியம் பகுதியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை சட்ட மன்ற தேர்தல் பொது பார்வையாளர் அஜய் யாதவ் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இப்பேரணியில் துணை வட்டாட்சியர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: