சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2’

ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியுள்ள வெப்ெதாடர், ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’. வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று தயாரித்துள்ளனர். குற்ற உணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டு வரும் உணர்வு ஆகியவற்றை மையமாக கொண்ட பரபரப்பான மர்ம கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜூன் நந்தகுமார் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்தியேகமாக இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடரில் எஸ்.ஐ மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையை தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக சசிகுமார் நடித்துள்ளார்.

Related Stories: